• Publisher's Desk
 • Tamil - தமிழ்
 • இந்துப் பார்வையில் விழிப்புமிகு கவனம்
 • இந்துப் பார்வையில் விழிப்புமிகு கவனம்

  விழிப்புமிகு கவனம் என்பது பிரபலமான மதச்சார்பற்ற நோக்கங்களுக்காக மீள் வரையறைச் செய்யப்பட்டிருக்கையில், அதனுடைய ஆதி ஆன்மீக நோக்கங்கள் மாறாது நிலைத்திருக்கின்றன.


  English |
  Marathi |
  Kannada |
  Tamil |
  Portuguese |
  Spanish
  Hindi

  சத்குரு போதிநாத வேலன்சுவாமிகள்


  விழிப்புமிகு கவனம். யோகம். தியானம். இவை மிகவும் அருகருகேயும் ஒத்தும் இருப்பினும், அவற்றுக்கிடையே முக்கியமான வேற்றுமைகள் உள்ளன. இவற்றுள் தற்காலத்து பொதுக் கலாச்சாரத்தில் பிரபலமாக முன்னிற்பது விழிப்புமிகு கவனமே, மற்றவையோ இன்னும் பெரிய அளவு பின்பற்றுனர்களை கால ஓட்டத்தில் சேர்த்து வைத்துள்ளன. யோகம் என கூகலில் தேடின் 1.2 பில்லியன் தொடுகைகள், தியானத்திற்கு 415 மில்லியன் தொடுகைகள் மற்றும் விழிப்புமிகு கவனத்திற்கு 207 மில்லியன் தொடுகைகள். யாவரும் அறிந்துள்ளது போலவே, யோகம் துவங்கியதும், இப்போதும் கூட ஒருங்கிணைந்த அங்கமாக நிலைத்திருப்பதும் இந்து மதத்தில்தான், இருப்பினும் தற்கால கலாச்சாரத்தின் கண்களில் இது, மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் நலத்திற்கும் மட்டுமே பயனுள்ள ஒரு மதச்சார்பற்ற பயிற்சியாக பார்க்கப்படுகிறது. ஆதியிலும், ஏன் இந்நாளிலும் கூட இந்தியாவில், இது இன்னும் ஆழமான ஆன்மீகப் பணியை கொண்டிருந்தது, இராஜ யோகம் எனும் முழுமையான எட்டு அடுக்கு ஒழுக்க நெறி என்று. விழிப்புமிகு கவனம் ஒரே மாதிரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்து மதத்தில் துவங்கி, பௌத்த தியானங்களில் முக்கிய உறுப்பாகி விட்டது, மேலும் இந்நாளைய பொதுக் கலாச்சாரத்தில் அது பெரும்பாலும் ஒரு ஆன்மீகமற்றப் பயிற்சியாக கருதப்படுகிறது, உணர்ச்சி நிர்வாகம், மன அழுத்த குறைப்பு மற்றும் மனதை ஒன்றச் செய்தல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப் படுகிறது.


  இந்து சமய அணுகுமுறையில், உணர்ச்சி நிர்வாகம், மன அழுத்த குறைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட மனக் குவிப்பு ஆகியன முக்கிய தேடுதல்கள்தான். ஆனால் அவை ஆரம்ப நிலை குறிக்கோள்களே. நினைவில் வைத்தல் என பொருளுடைய ஸ்மிருதி எனும் சமஸ்கிருத வார்த்தை விழிப்புமிகு கவனம் பற்றி பேசுகிறது, நம்மையே நாம் கவனத்தில் கொண்டும், நாம் கவனிக்கும் பொருளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பைப் பற்றி கவனத்தில் கொண்டும், அவ்வேளையில் அதற்காக ஈடுபாட்டுடன் இருப்பது ஆகும். விழிப்புமிகு கவனம் இராஜ யோகத்திற்கான தயார் பயிற்சிகளாகும், இது மேலும் முன்னேறிய உயர்நிலை உணர்வுநிலைகளுக்கு இட்டுச் சென்று, இறுதியில் நம்முள்ளே இருக்கும் சர்வவியாபக மற்றும் அன்பு சொறிந்த உணர்வுநிலையாம், தெய்வீகத்துடன் நம்மை ஐக்கியமடையச் செய்கிறது. இவ்வாறான மறைமெய் நிலைகள் இந்நாளைய விழிப்புமிகு கவனத்தின் மதச்சார்பற்ற வரையறையின் அங்கமாக இல்லை.


  நியூ யார்க் டைம்ஸ் இதழில் ஏப்ரல் 5, 2019 இல் பிரசுரமான ஒரு கட்டுரை, விழிப்புமிகு கவன பயிற்சிகள் அதன் இந்து தியான வேர்களில் இருந்து எவ்வளவு பிரிந்து சென்றுள்ளன என காட்டுகிறது: “விழிப்புமிகு கவனம் - மூச்சு யுக்திகள் கொண்ட பயிற்சிகள், தியானத்தில் உள்ளவற்றைப் போலவே, மனக் குவிப்பிற்காகவும் அலைக்கழிப்பைக் குறைக்கவும் உள்ளது - இது ஐக்கிய அமெரிக்காவின் இராணுவத்தில் மெல்ல நுழைகிறது. இந்த குளிர்காலத்தில், ஹவாயில் உள்ள ஷோபீல்ட் பாராக்கின் இராணுவ காலாட் படை வீரர்கள்,  தமது சுடும் திறனை அதிகரித்துக் கொள்ள விழிப்புமிகு கவனத்தை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர் - உதாரணத்திற்கு, களரி காலத்தில் தேவையில்லாத பொதுஜன ஆபத்தைக் குறைக்கும் நோக்கில் எந்த நேரத்தில் சுடுவது என்ற கவனத்தைப் பெறும் நோக்கில்.” இந்தக் கட்டுரை இதே பயிற்சியை தனது இராணுவத்திற்கு வழங்கும் மேலும் சில நாடுகளைப் பட்டியல் இட்டுள்ளது. தலைசிறப்பு விளையாட்டாளர்கள், பட நடிகர்கள், தனிநிகர் சமையல்காரர்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு இல்லங்களில் இருக்கும் மூன்று வயதினருக்கும் என்று கூட விழிப்புமிகு கவனம் உண்டு. இந்த ஆன்மீக ஒழுக்கம் இராணுவத்தினர் எதிரியை மேலும் திறமையுடன் சுட்டுக் கொல்லும் பயிற்சிக்காக மறு நோக்கம் செய்யப்பட்டிருப்பது துக்கமானதும் முரணானதும் ஆகும்.


  உண்மையிலேயே விழிப்புமிகு கவனம் என்றால் என்ன? நெதர்லாந்து நாட்டின் நேர்மறை மனோவியல் நிரல் கொடுக்கும் ஒரு செம்மையான வரையறை: “கவனமிகு விழிப்பு என்றால் கவனம் இங்கே இக்கணத்திலேயே இருத்தல்.” வேறு மாதிரி சொல்ல வேண்டும் என்றால், நமது முழு கவனத்தையும் தற்போதைய கணத்தில் நிகழும் செயலில் செலுத்தி, மனம் வேறு ஒன்றையும் நினைக்காது, அல்லது வேறு ஒன்றினால் திசை திருப்பப்படாமல் இருப்பது. உதாரணத்திற்கு, எளிய காரியங்களாகிய சமையல் அல்லது கார் கழுவுதல் போன்றவற்றில், முழு மனமும் அந்த காரியத்திலேயே இருப்பது. நண்பர் ஒருவர் தான் நேற்று செய்த காரியத்தைப் பற்றி விவரிக்கையில், நாம் சொல்லப்படுவதில் 100% கவனத்தைச் செலுத்துகிறோம். அந்த நேரத்தில் மற்ற ஒன்றைப் பற்றி நினைக்க அனுமதிப்பதில்லை. உணவு சாப்பிடும் வேளையில், நாம் ஒவ்வொரு பதார்த்தத்தின் வித்தியாசமான சுவையையும் இழைவுநயத்தையும் அனுபவிப்பதில் கவனத்தைச் செலுத்துகிறோம்.


  எனது குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமிகளின் போதனைகளில், மனப்பயிற்சிகள் கொண்ட இராஜ யோகம் எனும் முறையில் கவனம் செலுத்துவதுதான் முதல் அடி, இதனை கவனம், கவனக்குவிப்பு, தியானம், இறை அனுபூதிகள், மற்றும் தன்னை அறிதல் என வரையறுத்து இருந்தார். கவனம் என்பதற்கு சாட்சியத்தை உறுதியாக, மனதின் ஒரே இடத்தில் மையப்படுத்தி வைத்திருப்பது என அவர் விவரித்துள்ளார். கவனம் என்றால் சாட்சியம் ஒரு சிட்டுக் குருவி மலர் ஒன்றின் மேல் ஆகாயத்தில் நின்றவாறு, அதனை கூர்ந்து நோக்கி இருப்பது போன்றது. அது நகர்வதில்லை. மலர் நகர்வதில்லை, சாட்சியம் அந்த மலரை சாட்சாத்கரித்து நிற்கிறது. சாட்சியம் ஒரு சிட்டுக்குருவி மலரைக் கூர்ந்திருப்பது போன்ற நிலையை அடைய வேண்டும் எனில் ஜட உடலின் ஒட்டு மொத்த நரம்பு மண்டலமும், சுவாச செயல்பாடும் ஒரு குறிப்பிட்ட இலயத்தில் இருக்க வேண்டும். தற்போது நமது ஜட உடலும் நமது சுவாசமும் ஒருபோதும் எவ்வகையிலும் நெறிப்படுத்தப் படாததால், நாம் இலயம் கொண்ட சுவாசமும், உதாளவிதானம் கொண்டும் சுவாசிக்க ஆரம்பிக்க வேண்டும், நாம் வெளியிடும் மூச்சுக் கணக்கும் உள் இழுக்கும் மூச்சுக் கணக்கும் ஒரே எண்ணிக்கையில் இருக்கும் வண்ணம். இதனை நாம் நீண்ட காலத்திற்கு செய்த பின்னர் - நீங்கள் இப்பொழும் கூட இதைத் துவங்கலாம் - ஜட உடல் தேர்ச்சி பெறுகிறது, வெளி நரம்பு மண்டலம் தேர்ச்சி பெறுகிறது, துலங்குகிறது, மற்றும் சாட்சியம் கவனத்தில் வைக்கப்படுகிறது.


  நமது சுற்றுச் சூழலை கவனிப்பில் இடும் ஒரு விழிப்புமிகு கவனப் பயிற்சி ஒன்று இதோ. முடிந்தால் இயற்கைச் சூழ்ந்த ஓரிடத்தில் நடக்கச் செல்லுங்கள். நீங்கள் பார்ப்பவை யாவற்றின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் கவனியுங்கள். ஒருவேளை நீங்கள் ஒரு பிள்ளையுடன் நடந்து செல்கையில் அந்த பிள்ளை நீங்கள் கவனிக்காத விஷயங்களைக் கண்டு சொல்லியிருக்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். சிறு பிள்ளைகள் ஆழமான கவனிப்பு ஆற்றல் கொண்டுள்ளனர் ஏனெனில் அவர்களது அறிவு தேவைக்கு அதிகமாக செயல்படுவதில்லை, அல்லது பெரியவர்களின் மனதையும் ஞாபகத்தையும் சதா பற்றியிருக்கும் தீர்க்கப்படாத கடந்த கால அனுபவ சுமைகளைக் கொண்டிருக்கவில்லை. எவ்வளவுக்கு எவ்வளவு நுணுக்கங்களைக் கவனிப்பது என்பதில் நாம் பிள்ளைகளைப் போல இருக்க முயற்சிக்கலாம்.
   


  தியானத்தில் வெற்றி பெறுவதற்கு விழிப்புமிகு கவனம் இன்றியமையாதது. தியானத்தில் ஆரம்பகட்ட மக்கள் எதிர்நோக்கும் பொது அனுபவம் யாதெனில் எண்ணங்கள் சதா எல்லா இடங்களுக்கும் சென்று கொண்டிருக்கும், அவர்களால் அதனை அமைதியாக்க முடியாது. ஆக, தியானம் என்பது நிசப்தமான தடாகம் என்றில்லாமல் கொந்தளிக்கும் கடலாக இருக்கும். நமது சிந்தனைகளை கட்டுப்பாட்டில் வைப்பது ஒரு தசையை பயன்படுவதற்கு ஒப்பிடலாம். தசை பலமாக ஆவதற்கு தொடர்ச்சியாக அதனை பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும். எவ்வளவு பயன்படுத்தினோமோ அவ்வளவு அது பலமாக ஆகும். மனதை கட்டுப்படுத்துவதும் அவ்வாறுதான். எவ்வளவு நாம் அதனை கட்டுப்படுத்துகிறோமோ அவ்வளவு அதிகம் நாம் அதன் மீது கொண்டிருக்கும் ஆற்றல் பலமாகிறது. தினசரி சாதாரண வேலைகளின் பொழுது நாம் நமது எண்ணங்களை கட்டுப்படுத்தி இருக்கும் பட்சத்தில், உதாரணத்திற்கு ஒரு நாளில் எட்டு மணி நேரம், நாம் அரை மணி நேரம் தியானம் செய்யும் காலத்தில் செலவிடும் ஆற்றலை விட அதிகமாகவே பயன்படுத்தி இருப்போம். இது பதினாறு மடங்கு அதிகமாகும். இதனால் நாம் நமது எண்ணங்களை மேலும் சிறப்பாகக் கட்டுப்படுத்துவதை சீக்கிரமாகச் செய்யலாம்.


  கவனமிகு விழிப்பு என்பதற்கான எமது வரையறை ‘இங்கு இப்போது’ என்ற பதத்தை பயன்படுத்துகிறது, இவ்வாறே தற்போதைய கணத்தை விவரிக்கிறது. இறந்த காலம் “அங்கு அப்பொழுது,” என்றும் எதிர்காலம் “எங்கே எப்பொழுது” என்றும் ஒரே மாதிரியாக விவரிக்கப் படலாம். பலர் சதா கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் சிந்தித்தவாறு, குறிப்பிடத்தக்க காலத்தை வழமையாக செலவிடுகின்றனர், இவ்வாறான சிந்தனைகளினால் ஆக்ககரமான நன்மைகள் கிடையாது. “அங்கு அப்போது” மற்றும் “எங்கு எப்போது” போன்ற பயணங்கள் மனோ சக்தியை வீணடிக்கின்றன, நமது கவலை மற்றும் மன அழுத்தத்தை அதிகமாக்குகின்றன. அவ்வாறான சிந்தனைகள் “இங்கு இப்போது” என்ற நிகழ்காலத்தில் இருக்கும் முயற்சிக்கு எதிராகவே உள்ளன.
   
  குருதேவர் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் நாம் அலைக்கழிக்கப் படுவதைக் குறைக்கும் ஒரு பயன்மிக்க பயிற்சியை வழங்கியுள்ளார்: “ஒவ்வொரு நாளும் நீங்கள் சிறிய அளவில் உங்களிடத்தே செயல்பட்டும், ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் செய்யும் செயலில் முழுக் கவனத்தை குவிப்பதனால், நிகழ்காலத்தில் வாழ்வது சுலபமே, ஆரம்பத்தில் உங்களை நிலைத்த நிகழ்வில் நிலைகொள்ள காரியமாற்றுங்கள், முதலில் காலம் மற்றும் இடக் கட்டுப்பாடு விதியுங்கள், அதாவது கடந்த நான்கு நாட்களுக்கு முன்னாள் நிகழ்ந்தவற்றையும், அடுத்த நான்கு நாட்களுக்கு பிறகு நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளையும் பற்றி எதுவும் சிந்திக்க வேண்டாம் அல்லது கலந்துரையாட வேண்டாம். இதன் மூலமாக சாட்சியம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது, குவிக்கப்பட்டுள்ளது. கவனித்து இருக்கவும். உங்களையே கேளுங்கள், ‘நான் என்னையும், நான் இப்பொழுது செய்து கொண்டிருக்கும் காரியத்திலும் முழுமையாக கவனிக்கின்றேனா?’”


  பிறகு அவர் இந்த பயிற்சியை ஓர் அடி ஆழமாகக் கொண்டுச் செல்கிறார். “இவ்வாறு செய்வதன் வாயிலாக சாட்சியத்தின் மீது சிறிது ஆளுமை உங்களுக்குக் கிட்டியதும், அன்றாடம் அமைதியாக அமர்ந்திருக்க முயற்சி செய்யுங்கள், சும்மா இருங்கள். சிந்திக்க வேண்டாம். திட்டங்களைத் தீட்ட வேண்டாம். ஞாபகம் வேண்டாம். வெறுமனே அமர்ந்திருங்கள், நிகழ்காலத்தில் இருங்கள். ஆனால் சொல்லப்படுவது போல அது சுலபமல்ல, ஏனெனில் நாம் புதிது புதிதானவற்றிற்கும், மனம் சதாகாலமும் இயங்கிக் கொண்டிருப்பதற்கும் மிகவும் பழகி போய் விட்டோம். நமது இருப்பின் எளிமையிடம் நாம் பழகியிருக்கவில்லை. சுகமாக அமர்ந்தவாறு, முதுகுத்தண்டிலும் தலையிலும் இருக்கும் சக்தியாக மட்டும் இருங்கள். நேற்றைப் பற்றியும் நாளைய தினத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம். அவை தோற்றத்தில் இல்லை, மாறாக கடந்த காலத்தை மறுசீரமைக்கவும் எதிர்காலத்தை உருவாக்குவதும் பற்றிய உங்களின் திறனில்தான் இருக்கிறது. நிகழ்காலம் மட்டுமே காலம்.


  நிகழ் கணத்தில் அமைதியாக அமர்ந்திருப்பது நம்மை நமது இயல்பு தன்மையின் ஆழத்துடன் ஒத்தியைவு செய்யக் கூடும்- சுய ஆழ்அறிவு நிறைந்த நிலை. அவ்வாறான அமைதி தருணங்களில், நமக்கு ஆழ்அறிவு உள்நோக்குகள் கிடைக்கலாம், உதாரணத்திற்கு நமது அல்லது பிறரது வாழ்க்கை அமைப்பு வகையை தெளிவாகப் பார்ப்பது. எடுத்துக் காட்டுக்கு ஒரு புதிய திட்டத்தை நாம் பெரும் ஊக்கத்துடன் துவங்குவதையும், விரைவில் ஒரு பெரும் தடங்கள் தோன்றும்போது நாம் உற்சாகம் இழந்து கைவிட்டு விடுவதையும் நாம் காண நேரிடலாம். இந்த உள்நோக்கைத் துணை கொண்டு, நாம் புதிய ஒரு பழக்கத்தை உருவாக்கலாம், அதாவது தடைகளை எதிர்நோக்கும் காலத்தில் விடாமுயற்சியுடன் இருக்கும் ஓர் இயல்பை. அமைதியாக இருந்து நமது சுய ஆழ்அறிவு நிலை அல்லது ஆத்ம இயல்பைத் தொட்ட வண்ணம் இருப்பது, நமக்குள்ளே நாம் சாந்தம் கொண்டிருப்பது, வாழ்க்கை சூழ்நிலைகளில் மேலும் மனநிறைவுடன் இருப்பது மற்றும் நாம் எதிர்நோக்கும் அனுபவங்களிடத்து மேலதிக ஏற்புடைமை ஆகிய நன்மைகளை வழங்குகிறது. கடந்த காலத்திலிருந்து விடுதலை பெற்று, எதிர்காலத்தைப் பற்றி கலக்கம் அடையாமல், நாம் நிகழ்காலத்தின் பாதுகாப்பில் வாழ்வோம், நிலைத்த நிகழ்வில்.
   


  பதஞ்சலி மாமுனிவர் தனது யோக சூத்திரத்தில் யோகம் என்பது சித்த விருத்தி நிரோதஹ: என்கிறார். பெரும்பாலும் இது தியானத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் ஓர் ஒழுக்கம் என்று பரவலாக நினைக்கப்படுகிறது. பாரம்பரியமாக விழிப்புமிகு கவனம் எனும் கொள்கை பாரம்பரியமாக இந்து கலாச்சாரத்தில் நமது அன்றாடக் காரியங்களின் பொழுதும் மனதின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி ஆளும் செயல் வரை பரந்து விரிந்துள்ளது. அதிக கவனமிகு விழிப்புடன் நாம் இருக்கையில் தியானத்தின் பொழுது மனதை அமைதியாக்குவது மேலும் சுலபம் என்பது தெளிவாகிறது, இதனால் நமது ஆழ்அறிவு சொறிந்த ஆன்மீக இயல்பின் ஆழமான அனுபூதிகளுக்கு நாம் வழிகாட்டப் படுவோம்.
  The comments are owned by the author. We aren't responsible for their content.
  Copyright Himalayan Academy. All rights reserved.

  Get from the App Store Android app on Google Play