ஹிந்து மதத்தில் அனுபூதி / அறிதல்

Realization in Hinduism

எவ்வாறு கணித படிப்பை கால்குலஸ் எனும் நுண்கணிதத் (calculus) தலைப்பில் தொடங்க முடியாதோ, அவ்வாறே ஒருவரால் ஆன்மீகப் பாதையை இறை அனுபூதியுடன் தொடங்க முடியாது.

சத்குரு போதிநாத வேலன்சுவாமிகள்

ஒரு பக்தர் சமீப காலத்தில் இரண்டு கேள்விகளை நமது இணையவழி ஜூம் சத்சங்கத்திற்கு (zoom satsang) அனுப்பி இருந்தார். நான் கொடுத்த பதில்களையும், இந்த தலைப்பு சார்ந்த சற்று மேலதிக சிந்தனைகளையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

முதலாவது கேள்வி

“நவீன காலத்து பயன்பாடு, தன்னை அறிதல் என்பது தனிப்பட்ட ஒருவர் தனது சுய குறிக்கோள்களை, எதிர்கால ஆசைகளை அடைவது என பெரும்பாலும் புரிந்து கொள்ளப்படுகிறது. தன்னை அறிதல் என்பதன் ஆன்மீக அர்த்தத்தை இன்னும் அதிக தெளிவாக எடுத்துரைக்க நீங்கள் எந்த பதத்தை பரிந்துரைப்பீர்கள்?”

இந்து சிந்தனையைக் காட்டிலும் வேறுபட்ட அர்த்தத்தில் நவீன கால, மதச்சார்பற்ற தன்னை உணரும் கொள்கை உள்ளதை நீங்கள் சரியாகவே கண்டு இருக்கிறீர்கள். தற்காலத்தில் இது ஒருவன் தன்னுடைய சுய ஆற்றல்களை பூர்த்தி செய்து, வாழ்வில் வெற்றி பெறுவதை குறிக்க பயன்படுகிறது. ஒரு வாழ்க்கை வழிகாட்டி நபர் தன்னை-அறிதல் என்பதை கட்டமைப்புபூர்வ பயிற்சிகளின் மூலமாக தனது வாடிக்கயாளர்களின் “அபிலாசைகளை நிஜமாக்கும்” செயல்களை விவரிக்க பயன்படுத்தலாம். இந்த நவீன காலத்து பயன்பாடு, மிகவும் பலமாகவே உளவியலால் தாக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஆப்ரஹம் மஸ்லோவ், இவரே “தன் சுய திறன்களை முழுக்க வெளிப்படுத்துவதே” அதி உயர்ந்த சுய மனித வளர்ச்சி என்றார். கால ஒட்டத்தில், இந்த தன்னை அறிதல் எனும் சொற்றொடர் இங்கும் அங்குமாக பல்வேறு பிரபல எழுத்துப்படிவங்கள், பயிற்சியளிப்பு, மற்றும் தன்முயற்சி எழுத்துப்படிவங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.

யோக பாரம்பரியங்களில் தன்னை அறிதல் என்பது, மாறாக, இன்னும் மிக ஆழமான ஒன்றையே சுட்டுகிறது. அது நமது வெளிப்புற அடைவுநிலைகளைப் ஒட்டி இல்லாமல் ஆனால் உள்ளார்ந்த ஆன்மீக உண்மைகளை சார்ந்துள்ளது. வெறும் அந்த உண்மைகளை புத்தி ரீதியாக புரிந்து கொள்வது அன்றி, விவரிக்கப்பட்டிருக்கும் உண்மைகளை சுயமாக நேரடி அனுபவத்தில் / அனுபூதியில் உணர்வது ஆகும். உதாரணத்திற்கு, ஒருவரது ஆத்ம இயல்பு ஒரு பிரகாசமான உள்ளார்ந்த ஒளி, ஆத்மஜோதி என அனுபவிக்கப்படலாம். புத்தியைக் கொண்டு பார்க்கையில் இந்த வகையில் ஆத்மா உணரப்படலாம் எனும் புரிதல் ஓர் அனுபூதி என்ற ஆகாது. நிஜத்திலேயே ஆத்மஜோதியை உள்ளார காண்பதே அனுபூதி அல்லது அனுபவத்தில் அறிதல் என்று ஆகும். 

நவீன காலத்து மதச்சார்பற்ற தன்னை அறியும் பதத்துடன் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, ஒரு தீர்வு யாதெனில் ஆங்கில வார்த்தைகளுக்கு பதிலாக, ஒரு சமஸ்கிருத வார்த்தையைப் பயன்படுத்துவது ஆகும். தன்னுடைய எழுத்துக்களில் சத்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி அவர்கள் பயன்படுத்திய வார்த்தை தரிசனம் என்பதாகும். உதாரணம், சிவனொடு ஆடுதல் ஒன்றாம் மண்டலத்தின் தலைப்பு “தன்னை அறிதல் – பரமாத்ம தரிசனம்.” தரிசனம் என்பதற்கு பார்வை அல்லது காட்சி எனும் அர்த்தம் உள்ளது. பரமாத்ம தரிசனம் என்பதை தமிழில் சொல்லும் பொழுது, நீங்கள் “பரமாத்மனை மறைஞான காட்சியில் காணுதல்.” என்று சொல்லலாம். 

இரண்டாவது கேள்வி

“கடவுளை உணர்வதும், தன்னை அறிவதும் என சொல்லப்படுவதற்கு இந்து மதத்தில் என்ன பொருள்?”

இந்து மதத்தின் வெவ்வேறு தத்துவார்த்த பள்ளிகளில் கடவுளை அறிவதும், தன்னை அறிவதும் வேறு வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன. சுத்த பக்திமார்க்க இந்து போதனைகளில், ஒருவர் தனது உண்மை இயல்பை ஓர் ஆத்மாவாக, ஜட உடம்பிலிருந்து வேறுபட்ட ஒன்றாக,  அனுபூதியில் உணர்வதைச் சுட்டவே தன்னை அறிதல் எனும் சொற்றொடர் உபயோகம் ஆகிறது, அதே வேளையில், கடவுளை அறிதல் என்பது உச்ச தெய்வத்துடன் ஏற்படும் நேரடியான அனுபவம், கடவுளை அறிதல் எனக் கொள்ளப்படுகிறது. அத்துவைத பாரம்பரியங்களில், மாறாக, அதி ஆழத்தில் வீற்றிருக்கும் தான் எனும் நிலையே தீர்க்க உண்மைப் பொருளாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஆக இதில் தன்னை அறிதலும், கடவுளை அறிவதும், ஒரே ஒற்றை அடைவுநிலை ஆகிறது. 

சண்டோக்கிய உபநிஷத்தில் உள்ள ஒரு வரி தன்னுள் “தத் த்வம் அசி” எனும் கூற்றை அடக்கியுள்ளது, இது தன்னை அறிதலை வெளிப்படுத்தும் அத்துவைத பார்வைக்கோணத்தின் நான்கு பாரம்பரிய மஹாவாக்கியங்களில் ஒன்றாகும். இந்த வரி இவ்வாறாக பொருள்படுகிறது, “நீ அதுவாக உள்ளாய்.” இது தனிஒரு ஆத்மனுக்கும் (ஆத்மன், நீ, அல்லது த்வம்) தீர்க்க மெய்ப் பொருளுக்கும் (ப்ரஹ்மன், “அது” அல்லது தத்) உள்ள பேதமற்ற / இரண்டற்ற அடையாளத்தை பறைச்சாற்றுகிறது.

அத்துவைத பார்வை இவ்வாறாக கொடுக்கப்படுகையில், இது அடையமுடியப்படாத ஒரு குறிக்கோள், இது துறவிகள் மட்டுமே கவனம் செலுத்தப்படக் கூடிய ஒன்று என ஒருவருக்கு தோன்றலாம். எனது குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமி, இன்னும் ஏற்புடைமை கொண்ட ஒரு விளக்கத்தைக் கொடுத்திருந்தார். “தன்னை அறிதல்” சில படிநிலைகளால் ஆனது. ஒருவன் தன்னை ஒரு பயனற்ற ஒருவனாக, அறிவுப்பூர்வ, உணர்ச்சிப்பூர்வ மனநிலைகள் ஆனவன் என்று பார்க்காமல் அதற்கு அப்பால்பட்ட ஒருவனாக, தன்னை ஓர் ஆத்மப் பொருளாக அறிதல் (ஜீவன் அல்லது ஜீவாத்மன்) – இது திருப்தி, பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றைக் கொடுக்கிறது, மற்றும் இது ஓர் ஆரம்பம் ஆகும்.

“தன்னை சச்சிதானந்தமாக அறிவது (சகுண பிரம்மம்) மனநிறைவைக் கொடுக்கிறது, இதில் புற உலகைப் பற்றிய எல்லா உணர்ச்சிகள் எண்ணங்களில் இருந்து விடுதலை கிட்டுகிறது, நரம்பு மண்டலம் விசுத்தி மற்றும் அனாஹத சக்கரங்களில் வழிந்தோடும் சக்திகளுக்கு ஏற்றவாறு துலங்குகிறது. 

காலம், தோற்றம், வெளி கடந்த பரசிவமாக (நிர்குண பிரம்மம்) தன்னை அறிகையில், இது ஒரு மிகக் கூரிய வாளால் வெட்டப்படும் அனுபவம், எல்லா கட்டுக்களையும் வெட்டி, தனியொரு சாட்சியத்தை புரட்டிப் போட்டு, தன்னிலிருந்து வெளியே பார்க்கச் செய்கிறது, வெளியிலிருந்து உள்ளே தன்னை நோக்கி பார்ப்பது அல்லாமல். இந்த கடைசி நிலையே “ நீ அதுவாக இருக்கிறாய்” என உபநிஷத்துக்களால் கூறப்படுகிறது.

ஆன்மீக அறிதல் மூன்று படிநிலைகளில் நிகழ்வதாக குருதேவர் தெளிவாகக் கூறியுள்ளார். முதலாவது தன்னை ஒரு ஜீவன், ஆத்மனாக உணர்வது. இரண்டாவது தெய்வீகத்தை, சர்வவியாபக உணர்வுநிலையை, சச்சிதானந்தத்தை அனுபூதியில் உணர்வது. மூன்றாவது, தீர்க்கப் பொருள், பரசிவத்தை அறிவது, காலம், ரூபம் மற்று வெளிகடந்தது, இதுவே உண்மையான தன்னை அறிதல். இந்த மூன்று நிலைகள் உதவிகரமான கட்டமைப்பைக் கொடுத்து, இந்து மதத்தின் அத்துவைத பள்ளிகளில் காணப்படும் ஆன்மீக அடைவுகளின் கிரமமான வளர்ச்சி இயல்பை புரிந்துக் கொள்ள வைக்கின்றன. 

கணிதத்துடன் ஒப்பீடு.

தன்னை அறிவதை எவ்வாறு அணுகுவது என்ற புரிந்துணர்வுக்கு கணிதம் பயில்வதுடன் ஒப்பிடுவது உதவியாயிருக்கும். அடிப்படையில், கணிதத்தின் பல்வேறு அம்சங்கள் கிரமமாக மிக எளிதானதிலிருந்து, மிகச் சிக்கலானது வரை பயிலப்படுகிறது. முக்கிய பாடங்கள் ஆகியன: 1) எண்ணுதல், எண்கணிதம், பின்னம், தசமம்; 2) இயற்கணிதம்/அல்ஜீப்ரா, வடிவியல், முக்கோணவியல்; 3) நுண்கணிதம்/கால்குலஸ், புள்ளிவிவரங்கள் (statistics) மற்றும் நிகழ்தகவு (probability)

கணிதத்தில் எண்கணிதம் மற்றும் இயற்கணிதத்தில் தேர்ச்சி பெறாமல் ஒருவர் நுண்கணிதத்தில்(calculus) ஆரம்பிப்பது இல்லை, அதே போல, தன்னை அறிதல் படிப்படியாக விருத்தியடைகிறது,  மேலும் மேலும் அதிக சூக்குமம் பொருந்திய ஆன்மீக புரிதல். தன்னை அறிதலின் முதலாவது படிநிலை – தன்னை ஓர் ஆத்மனாக அறிதல்- அடிப்படைநிலை கணிதம் போன்றது. சச்சிதானந்தத்தை அனுபூதியில் உணர்வது மத்திய நிலைகளான – அல்ஜீப்ரா(algebra) மற்றும் வடிவியல் போன்றது. தீர்க்கப் பொருளாகிய, எல்லா குணங்களையும் கடந்த பரசிவத்தை அறிவது, மிகவும் மேம்பட்ட கணிதத்தைப் போன்றது.

நான் யார்?

தன்னுடைய பிரசுரிக்கப்பட்ட கடிதங்களில், பரமகுரு சிவயோகசுவாமிகள் நம்மை தனி ஒரு ஆத்மனாக, ஜீவனாக அனுபவிக்கும் கருத்தை தெரிவித்து உள்ளார்.

“நீ உடம்பு அல்ல. நீ மனம் அல்ல, புத்தி, அல்ல, சித்தமும் அல்ல. நீ ஆத்மா. ஆத்மா ஒருபோதும் அழியாது. இதுவே மகான்களுடைய அனுபவ சித்தாந்தம். இந்த உண்மை உன் மனதில் நன்றாக பதியக் கடவது. ஆனால், நீ கவனிக்கக் கடவது ஒன்று உண்டு. தரும நெறியில் பிசகாதே. எல்லா உயிரும் கடவுள் முன்னிலையில் என்று பயிற்சி செய். கடவுள் உள்ளும் புறமும் உள்ளார். நான்அவன்.’ ”

உடல், மனம், புத்தி, சித்தம் ஆகியவற்றில் ஒன்றியிருப்பதை குறைக்க, அவை நீங்கிய ஒரு பொருளில் அடையாளம் படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த வேறு ஒன்று யாதெனில், சாட்சியம், சமஸ்கிருதத்தில் சாட்ஷி என்று அழைக்கப்படுகிறது, மாற்றம் இல்லாத, சுய பிரகாசம் பொருந்திய சாட்சியம் இதுவே உடம்பு, மனம், மற்றும் எல்லா விதமான உணர்வு நிலைகளையும் கவனித்தவாறு உள்ளது. 

கான்சைஸ் என்சக்லோபீடியா ஆஃப் ஹிந்துஸ்ம் (Concise Encyclopedia of Hinduism) எனும் தனது நூலில், ஹர்ஷானந்தா சுவாமி, இந்த விவரிப்பைக் கொடுக்கிறார்: வேதாந்தத்தில், ஜீவாத்மன் (தனி ஆத்மா) சாட்சி அல்லது சாட்சி சைதன்யம் என அழைக்கப்படுகிறான், காரணம் அவனே எல்லா மூன்று விதமான உணர்வுநிலைகளாகிய ஜக்ரத், சுவப்னம், சுஷுப்தி ஆகியவற்றின் பார்வையாளனாக இருக்கிறான்.

சாட்சியம் என்பது மனம் மற்றும் அதன் செயல்பாடுகளில் இருந்து தனித்தே நின்று கவனிக்கும் ஒன்று என எனது குரு விவரித்தார். அவர் எழுதினார்: “ இதற்காகத்தான் நீங்கள் சாதனைகளில் தேர்ச்சி பெற உழைக்கிறீர்கள், கவனக்குவிப்பு தேர்ச்சி, நீங்கள் விரும்பும் இடத்தில் சாட்சியத்தை நிறுத்தி வைத்தல், நீங்கள் வேண்டும் நேரத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம், மற்றும் காயிஃ (Kaif)  சாட்சியம் தன்னை மட்டுமே தான் கவனிக்கும் நிலை, ஒட்டு மொத்த சாட்சியத்தையும் மற்றவற்றிலிருந்து பிரித்தெடுத்து, வெறும் சாட்சி நிலையில் மட்டுமே நிலைத்திருப்பது… காயிஃ நிலையை அடைவதும் நிலை பெறச் செய்வதும் ஓர் எளிய பயிற்சி. நீங்கள் சாட்சியத்தை சிந்தனைகளில் இருந்து வெளியே பிரித்து எடுக்கிறீர்கள், உணர்ச்சி நிலைகளில் இருந்து பிரித்து எடுக்கிறீர்கள், உடல் சார்பிலிருந்து பிரித்து எடுக்கிறீர்கள், நீங்கள் முழுதுமாக சாட்சியப் பொருளாக மட்டுமே இருக்கும் அந்த நிலையிலேயே இருக்கிறீர்கள்.”

இந்த பயிற்சி ஆழமாகையில், சாட்சியம் மென்மேலும் சுத்திகரிப்பு அடைகிறது. கால ஒட்டத்தில், பக்தர் ஒருவர் ஓர் ஆத்மன் என்ற உணர்வில் இருந்து, இன்னும் ஆழமான சர்வ வியாபக தெய்வீக உணர்வுநிலையை நோக்கி நகர்கிறார். சச்சிதானந்தத்தை அனுபவிக்கும் ஒருவர் எல்லாவற்றிடமும் பரந்த அன்பைக் கொண்டிருக்கிறார். வாழ்க்கை என்பது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான, ஏன் பேரானந்தமான அனுபவமுமாக கூட உள்ளது, காரியங்கள் சரியான நேரத்தில் நிகழ்கின்றன. உலகத்தில் நடக்கும் யாவும் எவ்வாறு இருக்க வேண்டுமோ, அவ்வாறே நடக்கின்றன, மனிதம் தனக்கு தானே உருவாக்கிய கர்மங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. சதா காலமும், மூன்றாவது அனுபூதி நிலை, பரசிவம் எனும் தீர்க்கப் பொருள், இன்னும் அனுபவிக்கப் பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது, பெரும்பாலோனோருக்கு எதிர்கால வாழ்க்கை ஒன்றில்.

Leave a Comment

Your name, email and comment may be published in Hinduism Today's "Letters" page in print and online. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top