image

ஆசிரியர் பீடம்

வாழ்க்ைகயின் நான்கு கட்டங்களிலும் முன்ேனறிச் ெசல்தல்

______________________

ஆசிரம தர்மத்தின் ஞானத்ைதப் பயன்படுத்துவதால் வாழ்க்ைகயின் ஒவ்வொரு காலகட்டமும் பொருள்
பொதிந்ததாகவும் கௌரவம் மிக்கதாகவும் இருக்கும், ஆனால் சற்று புதிய சிந்தைன
ேதைவப்படுகின்றது.

______________________

சற்குரு போதிநாத ேவலன்சுவாமிகள்

Read this article in:
English |
Hindi |
Tamil |
Spanish |
Gujarati |
Marathi |

image ராஜீவின் இலண்டன் சகமாணவர்கள் ஆர்ப்பரிப்பும் துடிப்பும் கொண்ட இைளஞர்கள். கவைலகள்
ஏதுமின்றி, எதிர்கால பொறுப்புக்கைள மறந்திருந்தனர். புத்திசாலி, அழகானவன், விரும்பப்படுபவன்
ஆனால் வாழ்க்ைகையச் சுைவக்கத் ெதரியாத ஒருவன் என அவர்கள் அவைனப் பார்க்கின்றனர்.
“நீ ஒேர ஒரு முைற மட்டுேம இைளஞனாக இருப்பாய்!” என ெஜரமி ஏளனிப்பான், “ஏன் எங்களுடன்
கலந்து சந்தோசப்படக்கூடாது?” ெபற்றோரின் போதைனப்படி, வாழ்க்ைக நான்கு கட்டங்களில்
உள்ளைதயும், நாம் மீண்டும் மீண்டும் பிறப்பதும் – ஆக நாம் பல பல முைற இளைம காலத்தில்
இருந்துள்ளோம் என்பைத ஏற்ற ராஜீவ் ேவறொரு உலகத்திேலேய வாழ்கின்றான். அறிைவ வளர்த்துக்
கொள்ளவும், நடத்ைதக் குணநலன்கைள ெசப்பனிட்டு, தான் தனது இருபதாம் வயதுகளில்
நுைழயவிருக்கும் எதிர்கால குடும்ப வாழ்க்ைகக்குத் தோதுவாக தனது ஆற்றைல முக்கிய
காரியங்களுக்குச் ேசமித்து வருகின்றான். முட்டாள்தனமாகச் சுற்றித் திரிவைத விடுத்து, நல்ல
பண்பாடு மிக்க ஒரு ெபண்ணுடன் ைககோர்த்து, தனது வாழ்க்ைகையப் பகிர்ந்துக் கொள்வதுடன்,
குழந்ைதகைள இவ்வுலகுக்கு கொண்டு வருவைதயும் அவன் விரும்பினான். ேமலும், தனது வயதான
காலத்ைதயும் அவன் நோக்கினான். தனது கடைமகைள முடித்துக் கொண்டப் பிறகு, தனது சுய ஆத்ம
சொரூபத்துக்குள் தன்ைன உள்வாங்கிக் கொள்ளவும், கடவுைள அறியும் முயற்சியில் திைளத்தும்
பூவுலகத்தில் இறுதி நாட்கைளக் கழிக்க அவன் எண்ணினான். வாழ்க்ைகயின் ஒவ்வொரு
கட்டத்திற்கும் ஓர் இயற்ைகயான குறிக்கோள் இருப்பதாகவும், முந்திய கட்டத்ைத விடவும் அடுத்தது
அதிக பயன்மிக்கதாகும் என்பைதயும் அவன் ஏற்றுக் கொண்டிருந்தான். இப்போது, அவன் முடிந்தளவு
கடினப்பட்டு படிக்கவும், இைடயிைடேய சிறிது விைளயாட்ைடயும் கொண்டிருக்க முடிவுச் ெசய்தான்.


இந்து பாரம்பரியத்தில் ேவறூண்றி இருந்தது ராஜீவின் திட்டம். அதாவது ஒரு தனிமனிதனின்
வாழ்க்ைக காலம் நான்கு கட்டங்கள் அல்லது ஆசிரமங்களாக வகுக்கப்பட்டு, இந்த பிரிவுமுைற,
ஆசிரம தர்மம் என அைழக்கப்படுகின்றது. ஓர் இயற்ைகயான ெவளிப்பாடும் உடல், மனம் மற்றும்
உணர்ச்சிகள் நான்கு வளர்ச்சிக்கிரமமான நிைலகளில் அைடயும் முதிர்ச்சிையயும் இது குறிக்கின்றது.
இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்ேப ஏற்படுத்தப்பட்டதும் தர்ம சாஸ்த்திர நூட்களில் துல்லியமாக
விவரிக்கப்பட்டும் உள்ளது. இதில் நமது கடைமகள் இளைம, முதிர்ச்சி மற்றும் வயோதிகம் ஆகிய
காலகட்டங்களில் ெபருமளவில் மாற்றமைடயும் ெமய்ைம பகரப்பட்டுள்ளது. ைமத்திரி உபநிஷதம்
கூறுவதாவது: “தான் சார்ந்திருக்கும் வாழ்க்ைக கட்டத்திற்கு ஒத்த காரியமாற்றுவது –
உண்ைமயிேலேய ஒரு சட்டம்! ஏைனயைவ ஒரு மரத்தின் கிைளகளுக்ேக ஒப்பாகும். இது இருப்பின்
ஒருவன் முன்ேனறுகின்றான்; எதிர்மைறயாயிருப்பின் இறங்கு முகேம.”


இந்துவின் பார்ைவயில் வாழ்க்ைக என்பதில் டாக்டர் எஸ். இராதாகிருஸ்னன் சுருங்கச்
சொல்கின்றார். “பிரமச்சரியம் அல்லது பயிற்சிக் காலம், கிரிஹஸ்தம் அல்லது உலகத்தில் ஒரு
குடும்பஸ்தனாக ேவைலச் ெசய்தல், வனப்ரஸ்தம் அல்லது சமூக கட்டுக்கைள தளர்த்தி உள்வாங்கும்
படலம் மற்றும் சன்னியாசம் அல்லது துறவறம், விடுதைலக்கான எதிர்பார்ப்பான ேதடல் என்ற நான்கு
கட்டங்கள் காட்டுவது யாெதனின், வாழ்க்ைக என்பது வித்தியாசமான நிைலகைளக் கொண்ட,
இறுதியில் அனாதியான வாழ்க்ைகைய நோக்கிய ஒரு யாத்திைர என்பேத.”


இந்த முைறைம ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தைதப் போலேவ இப்போதும் அேத முக்கியமும்
மதிப்பும் தாங்கியுள்ளது, வகுப்பு மற்றும் பால் ேவற்றுைம இன்றி, எல்லா இந்துக்களாலும் பகிர்ந்துக்
கொள்ளப்படுகின்றது. இருப்பினும் பழங்கால விளக்கம் நமது நவீன யுகத்திற்கு பரிபூரணமாக
உருவகம் ெபறாமல் போகலாம். ேவத காலத்தில் இந்தியாவில் இருந்தைதப் போல் இல்லாமல்
சமுதாயம் ேபரளவு மாற்றம் கண்டுள்ளது. உதாரணத்திற்கு, 50 வயதுக்கு ேமற்பட்டவர்கள் எல்லாரும்
உணவுக்காக பிச்ைச எடுத்து காட்டில் தனியாக வாழ்வது நைடமுைறப்படாது. இது 21ஆம்
நூற்றாண்டு சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளவும் படாது. சில நாடுகளில் காடுகளில் வாழ்பவர்கள்
நாடோடிகள் அல்லது எல்ைல அத்துமீறிகள் எனக் கருதப்பட்டு ஒருேவைள சிைறயில் தள்ளப்படலாம்.
தற்கால இந்துக்கள் வாழ்வின் இயற்ைகயான பரிணாம நகர்வு ஞானத்ைத பயன்படுத்துவதற்கு
சிறிதளவு மீள் விவரிப்புத் ேதைவப்படுகின்றது. முதலில் அவற்றின் பாரம்பரிய விளக்கத்ைதக்
காண்போம்.


முதல் கட்டம் அல்லது ஆசிரமம் பிரமச்சரியம் ஆகும் – மாணவர் வாழ்க்ைக – இந்த ஆசிரமத்தில்
இருப்போர் பிரமச்சாரிகள், “ெதய்வீக நடத்ைத உள்ளவர்கள்” என அைழக்கப்படுவர். இது ஏழு
அல்லது எட்டு வயதிலிருந்து 19 அல்லது 20 வயது வைர உள்ள பன்னிரண்டு ஆண்டுகாலமாகும்.
மாணவன் தனது குருவின் இல்லத்தில் வாழ்ந்து, மைறநூட்கள், தத்துவம், விஞ்ஞானம் மற்றும்
தர்க்கவியல் ஆகியவற்ைற பயில்வதும் அவனுக்கு எவ்வாறு ைவதீக யாகம் ெசய்வது எனவும்
போதிக்கப்படுவதும் நைடெபறும். காமத் துறவு, உண்ைம ேபசுதல், உடல் கட்டுப்பாடு எ.கா
குளிர்நீரில் குளித்தல் மற்றும் இரவில் அளவோடு உண்ணல் என பிரமச்சாரி ஒரு கண்டிப்பான
நடத்ைதைய ேமற்கொள்ள எதிர்பார்க்கப்படுவது. குருவிற்கு ேசைவ ெசய்தல் மற்றும் அவரது வீட்டு
கடைமகைளக் கவனித்துக் கொள்ளல் போன்றைவயும் அவனது அதிகாரப்பூர்வ படிப்ைபப் போலேவ
இருக்கும்.


இரண்டாவது படிநிைல குடும்ப வாழ்க்ைக, கிரிஹஸ்த தர்மம், இந்த ஆசிரமத்தில் இருப்போர்
கிரிஹஸ்தின் என அைழக்கப்படுவர். தனது பிறந்த வீட்டிற்குத் திரும்பியதும், மாணவனானவன்
திருமணம் ெசய்து ஒரு குடும்பத்ைத வளர்த்ெதடுக்க ேவண்டும், நியாயமான முைறயில் தனது
மைனவிக்கும் பிள்ைளகளுக்கும் சிறப்பாக சம்பாரிக்க ேவண்டும், தனது ெபற்றோைரக் காக்க
ேவண்டும் மற்றும் தாராளமாகத் தரும காரியங்களுக்கு வழங்க ேவண்டும். மைறநூட்கள் கற்பதும்
தினமும் வீட்டில் ேவத யாகம் ெசய்வதும் அவனது சமயக் கடைமகளாகும்.


மூன்றாவது படிநிைல வனப்ரஸ்தம் – தனித்திருக்கும் வாழ்வு – இந்த ஆசிரமத்தில் இருப்போர்
வனப்ரஸ்தின் எனப்படும் “வனத்தில் வாழ்வோர்.” பொதுவில் 50 அல்லது 55ஆம் வயது வாக்கில்,
ேபரக்குழந்ைதகள் பிறந்து, குடும்பஸ்தன் தன் குடும்ப பொறுப்புக்கைள தனது பிள்ைளகளிடம்
ஒப்பைடத்து, வனப்பகுதிக்கு ெசல்வது முைற என சாஸ்திரங்கள் விளக்குகின்றன. தான்
எதிர்நோக்கவிருக்கும் கடுைமயான வாழ்க்ைகயில் பங்ெகடுக்க விருப்பமிருந்தால் மைனவிையயும்
உடன்கொள்வது, இல்ைலேயல் மகன்களிடம் விட்டுச் ெசல்வது அவனது முடிவு. வாழ்க்ைகயின்
கைடசி கட்டத்திற்குத் தயார் ெசய்யும் பொருட்டு தினமும் ேவத யாகமும், பிரமச்சரியம் மற்றும்
பரம்பொருைள தியானித்தும் வருவது அவனது பயிற்சிகளாகும்.


நான்காம் படிநிைல மைறநூட்களில் சன்னியாசம் – துறவற வாழ்க்ைக – என விவரிக்கப்படுகின்றது,
இதில் இருப்போர் சன்னியாசிகள் எனப்படுவர். வனத்தில் இருக்கும் தனியாளி, தனக்குள்ள எல்லா
சொத்து பத்துக்கைளயும் ஒட்டுமொத்தமாக துறக்கவும், ஒரு துறவியின் வாழ்க்ைகயும் வாழத்
ேதைவயான மன பலம் இருப்பதாக உணருங்கால், தனது மைனவிைய பிள்ைளகளின் பாதுகாப்பில்
விட்டபின்னர், அவன் சன்னியாசத்ைதத் தழுவலாம். இந்நிைலயில் அவன் நாடோடியாக, இடத்திற்கு
இடம் மாறியவாறு, பிச்ைசெயடுத்து உண்டு தன்ைன ஜபம், தியானம், தனது இஷ்ட ெதய்வ வழிபாடு
மற்றும் மைறநூல் தியானத்திலும் ஈடுபடுத்த ேவண்டும்.


இந்த பண்ைடய ஆசிரம விவரங்கள் எவ்வாறு தற்போைதய நவீன சமுதாயத்திற்கு கொண்டுவரப்
படுகின்றது என்பைத அடுத்து பார்ப்போம். எனது குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமிகள், இக்காலத்தில்
ஒவ்வொரு ஆசிரமும் 24 ஆண்டுகாலம் என கருதினார், இது ஆண் ெபண் இருவருக்கும் சரிசமமாக
பொருந்தும்: வாழ்வின் முதல் 24 ஆண்டுகள் பிரமச்சரியம்; கிரிஹஸ்தம் 24 வயதிலிருந்து 48 வைர;
வனப்ரஸ்தம் 48 முதல் 72 வயது வைர; மற்றும் சன்னியாசம் 72 வயதில் தொடங்கும்.


பிரமச்சரியத்தின் நோக்கம் இன்று வைர அப்படிேய இருக்கின்றது, தனது குருவின் வீட்டில் வாழ்வது
போன்ற ஒரு சில குறிப்புக்கள் மட்டும் தொடரப்படவில்ைல. ஆழமான கல்வி பயில்தேல இன்னும்
முக்கியமான குறி. பொதுவில் ஒருவன் தான் தனது பக்குவ வயதில் ெசய்யவிருக்கும் தொழிலுக்கான
கல்விைய இதில் ெபறுகின்றான். சமயக் கோணத்தில், ஒருவன் இந்து மதத்தின் அடிப்பைடகைளப்
பயில்வதும், மந்திரங்கைள மனனம் ெசய்வதும், வீட்டு பூைஜ மாடத்தில் பூைஜ ெசய்வதும் ஆகும்.
இல்லத்தில் ெசய்யப்படும் ைவதீக யாகம் வீட்டு பூைஜயாக மாறியுள்ளது. மாணவர்களுக்குச் சுய
ஒழுக்கம், காமக்கட்டுப்பாடு மற்றும் ஏைனய ஊக்ககரமான குணநலன்கள் போதிக்கப்படுகின்றன.


கிரிஹஸ்த ஆசிரமத்தின் விவரிப்புகளும் காலத்தின் சோதைனகைள சந்தித்து உள்ளது. அதன் முக்கிய
நோக்கம் திருமணம், பிள்ைளகைளப் ெபற்று வளர்த்தல், தனது தொழில் மூலம் சமூகத்திற்கு ேசைவ
ெசய்தல், பணம் ஈட்டுதல், வயதானவர்கைளப் பாதுகாத்தல் மற்றும் தர்மச் ெசயல்கள் ெசய்தல்.
முடிந்தால் குடும்பத்தார் அைனவரும் கலந்து கொண்டு, தவறாமல் வீட்டில் தினசரி பூைஜ ெசய்வதும்
இதில் அடங்கும். இந்நாளில், குடும்பஸ்தன் ஒருவேன தனது பிள்ைளகளுக்கு இந்துமதத்தின் ஆரம்ப
ஆசிரியனாகின்றான். இத்தொழிைல குரு ஒருவர் பழங்காலத்தில் ெசய்திருந்தார். இந்த ஆசிரமம்
பரபரப்பான உலகத்தில் ேநரத்ைதச் ெசலவழித்து, அேத ேவைளயில் தனது குடும்பத்ைதயும்
தொழிைலயும் முன்ேனற்றுவதற்கு உரியதாகும்.


வனப்ரஸ்த நிைலைய ெதளிவாக்கும்போதுதான் பைழய விவரிப்புக்கள் பற்றி மீண்டும் சிந்திக்கத்
தோன்றுகின்றது. 48 வயதில் ஒரு வனவாசியாகுவது ெபரும்பாலான மக்களுக்கு ஒரு ேதர்வாக
இல்ைல. எனது குரு இக்கட்டத்திைன, ஓர் ஆலோசகரும் வயோதிகருமாக நின்று இைளய
தைலமுைறயினருக்கு உதவியும் வழிகாட்டியும் வரும் ஓர் இயற்ைகயான காலம் என விவரித்துள்ளார்.
பிரமச்சாரிகளும், கிரிஹஸ்திகளும் வனப்ரஸ்திகளின் அறிவுைரகைள ஆர்வத்துடன் ேகட்டு,
அவர்களின் ஆண்டுக்கணக்கான அனுபவத்தின் பலன்கைள அைடய முடியும். எடுத்துக்காட்டுக்கு,
இந்தக் கட்டத்திலிருக்கும் இந்துக்கள் இைளஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். சமூக
நிகழ்வுகள், குழந்ைதகளுக்கு இந்துமதக் கல்வி, கோயில் பொறுப்புதாரிகளாகவோ அல்லது
மதச்சார்பற்ற, இலாப நோக்கமில்லா இயக்கங்களில் தைலைமத்துவ பொறுப்புக்கைள நிைறவுச்
ெசய்யலாம்.


சன்னியாச ஆசிரமத்தின் எல்ைலயும் விரிந்துள்ளது. நவீன கால இந்துக்களில் சிறிய விகிதத்தினர்
பணிஓய்வுக்குப் பின்னர், உலைகத் துறந்து, இந்தியாவின் ஆயிரக்கணக்கான சாது
சன்னியாசிகளுடன் இைணந்து உண்ைமையத் ேதடி பயணிப்பர். இவர்களில் பலர் தம் 20களிலும்
30களிலும் தமது துறவுப் பாைதைய ஏற்றிருப்பர். இவ்வாறாக வயோதிகர்கள் சன்னியாசம் ஏற்பது
திருமணமாகாதவர்களுக்கும், விதைவகளுக்கு சரியாக அைமகின்றது. இப்பழக்கம் இந்தியாவின் பல
பகுதிகளில் இன்னும் பயன்படுகின்றது, சமுதாயமும் இவ்வாறான புனித ஆண்கைளயும் ெபண்கைளயும்
மதிக்கின்றது. ஆனால் உலகத்தின் ெபரும்பகுதிகளில், இது புரிந்துகொள்ளப்படவோ, ஏற்றுக்
கொள்ளப்படவோ இல்ைல.


72 வயது அைடந்த இந்துக்கள் பலர், தமது எதிர்காலத்தில் தாம் எவ்வாறு வித்தியாசமாக ெசயல்பட
ேவண்டும் என என்ைனக் ேகட்பர். அவர்கள் ஏற்கனேவ ேமற்கொண்டு வந்துள்ள சமய பயிற்சிகைள
இன்னும் அதிகமாகச் ெசய்யேவண்டும் என்பேத எனது அறிவுைர. 30 நிமிடம் வீட்டு பூைஜைய ெசய்து
வந்திருந்தால், இப்போது அதைன ஒரு மணி ேநரத்திற்கு அதிகரிக்க ேவண்டும். தினமும் அைர
மணிேநரம் தியானித்து வந்திருந்தால், இப்போது அதைன ஒரு மணி ேநரம் ெசய்ய ேவண்டும்.
வருடத்தில் இரண்டு வாரம் யாத்திைரச் ெசய்து இருப்பின், ஒரு மாதமாக அதிகரிக்கவும். இந்த
மாற்றங்கள் ஓர் உறுதியான பழக்கமாக உருப்ெபறும் பட்சத்தில், ஒருவன் இயற்ைகயிேலேய ேமலும்
அதிகமான ேநரத்ைத சமயப் பயிற்சிகளுக்கு வழங்க முடியும். 72 வயதிற்குப் பிறகு, உடலின் பலம்
வீழ்ச்சியைடைகயில், உள்ளூராகத் திரும்பி, உலக ஈடுபாடுகளில் இருந்து நீங்குவதற்கான தக்க
காலமாகும்.


எனது குரு இந்நவீன காலத்திற்கு ஏற்ற மூன்றாம் மற்றும் நான்காம் ஆசிரமங்கைளப் பற்றிய கீழ்கண்ட
உதவிப்பூர்வமான விவரிப்ைப வழங்கியுள்ளார்: “வாழ்வின் பிந்திய கால கட்டத்தில் குடும்ப பக்தர்கள்
தமது மத சாதைனகைள அதிகப்படுத்தியும் முதல் இரண்டு ஆசிரமங்களில் தாம் ெபற்ற
அனுபவங்கைளயும் ஞானத்ைதயும் சமுதாயத்திற்குக் கொடுப்பர். வயது 48 முதல் 72 வைர இருக்கும்
வனப்ரஸ்த ஆசிரமம் வாழ்க்ைகயின் முக்கியமான கட்டமாகும், ஏெனனில் இக்காலத்தில்தான்
பிரமச்சரிய மாணவர்களிடத்தும் குடும்பஸ்தர்களிடமும் மிகச் சிறப்பான அைடவுகைள ஊக்குவிக்க
முடியும், அவர்களின் வாழ்க்ைக எப்படி இருக்க ேவண்டுமோ அப்படி இருக்க உதவும்படியாக. பின்னர்,
72 வயதில் சன்னியாச ஆசிரமம் ஆரம்பிக்ைகயில், இவ்வளவு காலமும் தான் ெபற்ற அனுபூதிகைள
ஆழப்படுத்தியும் எண்ணி மகிழவும் காலம் வாய்க்கின்றது.”

Four dynamic stages:
1) As a student, gaining knowledge in math, science and other fields;
2) supporting and raising a family;
3) as a grandparent, semi-retired, devoting more time to religious pursuits and community programs while guiding one’s offspring and their children;
4) as the physical forces wane, withdrawing more and more into religious practices.

image
1. Student, age 12–24
Brahmacharya Ashrama
image
2. Householder, age 24–48
Grihastha Ashrama
image
3. Senior Advisor, age 48–72
Vanaprastha Ashrama
image
4. Religious Devotion, age 72 & onward
Sannyasa Ashrama